top of page

Anjeer’s ( Fig )Medicinal Benefits /அத்தி மருத்துவ குணங்கள்






There is no other natural food that is as nutritious as fruits to maintain good health and live long without a second of illness. In our country where countless kinds of fruits are grown, "fig" is a fruit that can cure many types of physical diseases for those who eat it. Even if we drink this fig in juice or dry it and eat , its nutrients are fully available to us.

Nutritional properties

In fresh figs;

• 4 grams of protein

• 200 mg of calcium

• 4 mg of iron

• Vitamin A

• Thiamine 0.10 mg and

Contains 260 calories of nutrients.

Figs are low in vitamin C. But sugar is high in calcium, iron and copper.

Figs can be dried and packed in tins for export.

Jam can be made from figs.

Dry fruit can be powdered and used instead of coffee powder.

Milk is extracted from the fruit and used as medicine.



Benefits of Figs :

Heart diseases

Heart-healthy figs should be eaten frequently as they work to pump blood to all parts of our body. The phenol and omega-6 compounds it contains have heart-strengthening properties.

Constipation

Constipation can occur due to reasons such as not drinking the right amount of water after eating food, staying awake for a long time at night, and not doing any physical activity after eating. Constipation can be relieved by consuming dry figs or fig juice regularly.

Body weight

It is important to follow a proper diet and lifestyle to avoid gaining weight. Eating more fiber-rich foods prevents the body from accumulating fat in the diet. Figs are high in that fiber. So it is better to eat some figs atleast once a day.

Menstrual disorders

From young girls to menstruating women, soaking a fig in water at night daily and eating the fruit in the morning after waking up will cure menstrual related disorders.

Fig for insomnia

The water rich in figs has potential properties that benefit the central nervous system. A study has shown that fig juice induces psycho-hypnotic effects on the central nervous system. It helps one to treat problems like anxiety, migraine and insomnia.

Anjeer to masculinity

If you eat figs continuously for 41 days, it will increase your virility,motility and get rid of impotence.

Benefits of drinking a glass of fig juice daily!!!!

Figs are a fruit that many of us do not want to eat. But in ancient times, our ancestors ate a lot of this fruit. If you don't like eating this fruit as it is, make juice and drink it. This way you can get all its nutrients.

It is very good for women to drink this fruit juice which is rich in calcium and potassium. Fig juice is an excellent calcium-rich substitute for those who do not like milk. Also figs are very low in fats and cholesterol. As it increases the strength and energy of the body, the juice of this fruit is an excellent drink for athletes.



Benefits of drinking fig juice

* Provides good sleep

* Corrects bronchitis

* Dissolves bladder stones

* Helps in muscle development

* Burns excess calories

* Best alternative to breast milk

* Prevents macular tissue degeneration

* Stimulates hair growth

* Prevents the appearance of ageing

Side effects of figs

* Some people are naturally allergic to figs.

* Figs, due to their laxative properties, are very effective in relieving constipation, but consuming too much figs can cause diarrhea.

* Fig leaf may increase skin sensitivity when applied topically. It is advised not to apply fig leaf ointment before going out in the sun.

Figs reduce blood sugar levels in the body. Therefore, if you are a diabetic, are already taking blood sugar-lowering medications, or have low blood sugar levels in general, it is highly advisable to consult your doctor before consuming figs.

* Figs are a natural blood thinner. So, if you are about to undergo a surgery, or have recently undergone a surgery, it is better not to take figs for two weeks. Ask your doctor if you can resume taking figs after surgery.


Tamil Translation.....



டல்நலம் நன்றாக இருக்கவும், நீண்ட காலம் நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ்வதற்கு பழங்கள் போன்ற சத்துமிக்க இயற்கை உணவு வேறெதுவும் இருக்க முடியாது. எண்ணற்ற வகையான பழங்கள் விளைகின்ற நமது நாட்டில், சாப்பிடுபவர்களுக்கு பல விதமான உடல் நோய்கள் பாதிப்புகளை நீக்கும் ஒரு பழமாக “அத்திப்பழம்” இருக்கிறது. இந்த அத்திப்பழத்தை ஜூஸ் போட்டு அருந்தினாலும், உலரவைத்து வத்தல் பதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.




ஊட்டச்சத்து பண்புகள்

புத்தம் புதிய அத்தி பழத்தில்;

புரத சத்து 4 கிராம்

சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம்

இரும்பு சத்து 4 மில்லி கிராம்

வைட்டமின் ஏ

தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும்

260 கலோரி சத்துகள் உள்ளன.

அத்தி பழத்தில் வைட்டமின் சி குறைந்த அளவில் உள்ளது. ஆனால் அதிக அளவு சர்க்கரை சுண்ணாம்பு சத்து, இரும்பு, தாமிர சத்து உள்ளது.

அத்தி பழம் உலர வைக்கப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம்.


அத்தி பழத்தில் ஜாம் தயாரிக்கலாம்.


உலர்ந்த பழத்தை பொடிபொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப்படுத்தலாம்.

காயில் இருந்து பால் எடுக்கப்பட்டு மருந்து பொருளாக பயன்படுகிறது.

அத்திப்பழத்தின் பயன்கள்

இதய நோய்கள்

நமது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் பணியை செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள பீனோல் மற்றும் ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும்.

மலச்சிக்கல்

உணவுகளை சாப்பிட பின்பு சரியான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, இரவில் நெடு நேரம் கண் விழித்திருப்பது, சாப்பிட்டதற்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். காய்ந்த அத்திப்பழங்களையோ அல்லது அத்திப்பழ ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.

உடல் எடை


உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சரியான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பது அவசியம். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உணவில் இருக்கும் கொழுப்பு, உடலில் சேராமல் தடுக்கப்படுகிறது. அந்த நார்ச்சத்து அத்திப்பழத்தில் அதிகம் உள்ளது. எனவே அதை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சில அத்திப்பழங்களை சாப்பிடுவது நல்லது.

மாதவிடாய் கோளாறுகள்

இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை, தினமும் ஒரு அத்திப்பழத்தை இரவு பொழுதில் நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட்டு வர மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

தூக்கமின்மைக்கு அத்தி


அத்திப்பழத்தின் நிறைந்துள்ள தண்ணீர் மத்திய நரம்பு மண்டலத்தில் நன்மையளிக்கும் சாத்தியமான பண்புகளை கொண்டுள்ளது. அத்தி பழ ஜூஸ் மத்திய நரம்பு மண்டலத்தில் மீது மயக்க-ஹிப்னாடிக் செயல்களைக் தூண்டுகிறது என்று ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது ஒருவருக்கு ஏற்படும் கவலை, ஒற்றைத் தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

ஆண்மைக்கு அஞ்சீர்


அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும், ஆண்மை குறைபாடு நீங்கும்.

தினமும் ஒரு டம்ளர் அத்திப்பழ ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!!

நம்மில் பலருக்கும் பார்த்ததும் சாப்பிடத் தோன்றாத ஓர் பழம் தான் அத்திப்பழம். ஆனால் பழங்காலத்தில் இந்த பழத்தை நம் முன்னோர்கள் அதிகம் சாப்பிட்டார்கள்.இந்த பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காவிட்டால், ஜூஸ் தயாரித்துக் குடியுங்கள். இதனாலும் அதன் முழு சத்துக்களையும் பெற முடியும்.


கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் நிறைந்த இந்த பழ ஜூஸை பெண்கள் குடிப்பது மிகவும் நல்லது. பால் பொருட்கள் பிடிக்காதவர்களுக்கு அத்திப்பழ ஜூஸ் மிகச்சிறப்பான ஓர் கால்சியம் நிறைந்த மாற்றுப் பொருளாக இருக்கும். மேலும் அத்திப்பழத்தில் கொழுப்புக்கள் மற்றும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு. இது உடலின் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் என்பதால், விளையாட்டு வீரர்களுக்கு, இந்த பழத்தின் ஜூஸ் மிகவும் சிறப்பான பானமாக இருக்கும்.

அத்திப்பழ ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்,

* நல்ல தூக்கத்தைக் கிடைக்கச் செய்யும்

* மூச்சுக்குழாய் அழற்சியை சரிசெய்யும்

* சிறுநீர்ப்பை கற்களைக் கரைக்கும்

* தசைகளின் வளர்ச்சிக்கு உதவும்

* அதிகப்படியான கலோரிகளை எரிக்கும்

* தாய்ப்பாலுக்கு சிறந்த மாற்று

* மாகுலர் திசு சிதைவு தடுக்கப்படும்

* தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும்

* முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும்




அத்தியின் பக்க விளைவுகள்

* சில நபர்கள், இயற்கையாக அத்திப்பழங்களிடம் ஒவ்வாமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

* அத்திப்பழம், அதன் மலமிளக்கும் தன்மைகள் காரணமாக, மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிப்பதில் மிகவும் திறன்மிக்கது, ஆனால், அளவுக்கு அதிகமாக அத்திப்பழங்களை எடுத்துக் கொள்வது வயிற்றுப்போக்கு ஏற்படக் காரணமாகக் கூடும்.

* அத்தி இலை, மேற்பூச்சாகத் தடவப்படும் பொழுது தோலின் உணர்திறனை அதிகரிக்கக் கூடும். வெயிலில் வெளியே செல்வதற்கு முன்னர், அத்தி இலை களிம்பினைத் தடவாமல் இருப்பது அறிவுறுத்தப்படுகிறது.

* அத்திப்பழம், உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவுகளைக் குறைக்கிறது. எனவே, நீங்கள் ஒரு நீரிழிவினால் பாதிக்கப்பட்ட, ஏற்கனவே இரத்த சர்க்கரையைக் குறைக்க மருந்துகள் எடுத்துக் கொண்டு இருப்பவராகவோ அல்லது பொதுவாகவே நீங்கள் குறைந்த இரத்த சர்க்கரை அளவுகளைக் கொண்டிருப்பவராகவோ இருந்தால், அத்திப்பழங்களை உட்கொள்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது.

* அத்திப்பழம் ஒரு இயற்கையான இரத்த மெலிதாக்கியாகும். எனவே, நீங்கள் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறவராகவோ, அல்லது சமீபத்தில் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ, இரண்டு வாரங்களுக்கு அத்திப்பழம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அத்திப்பழத்தை எடுத்துக் கொள்வதை மறுபடியும் தொடரலாமா என்பதை, உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.


1 comentário


pavithra01t
30 de jul. de 2022

Very useful information for the people to lead a healthy life.

Curtir
bottom of page