top of page

Sitharathai Benefits / சித்தரத்தை தரும் சிறப்பான ஆரோக்கியம்

Excellent health that gives the picture! (Sitharathai Benefits in Tamil) It is a pity that today's generation is largely unaware of the wonderful herb Siththaratha. Let's look at the radius at which the mucus in the chest can be removed without deception. This herb is powerful in curing colds, colds, flu, coughs and chronic colds. Colds, coughs, and sneezes are not uncommon in today's world. Sitharathai Uses / Sitharathai Benefits Sitharathai Powder: Take 2-4 grams of that powder, mix it with honey and eat it twice a day, the mucus will fly away. There are two types of sitharathai: There are so many types it's hard to say. Both are good for colds. Sitharathai kasayam: This herb is powerful in curing colds, colds, flu, coughs and chronic colds. Use the sitharathai kasyam regularly, lung-throat disease will run away. This sitharathai from ginger family, it is soaked in 350 ml of hot water for 3 hours, filtered and mixed with 22 ml - 44 ml of honey. Sores on the tongue - can be treated with: Brushing your teeth clean will not cure bad breath in some people. Some people get bad breath even if they have a stomach ulcer. Thus they will suffer from not being able to speak and not being able to open their mouths and not being able to chew food. Sitharathai would be a good solution for them. Buy a sitharathai and soak a piece of herb in two quarts of water. Then rinse your mouth after brushing your teeth and then rinse your mouth with this water. Put it in the mouth for a few seconds and then swallow the blister to spread the taste of water throughout the mouth. Doing this so will reduce the soreness on the tongue in three days. Bad breath, mouth sores all go away. Reduce Fever - Use Chitrarat: If you suffer from high fever, you can drink Chitrarat water. Slightly carb-flavored, it gives the body the heat it needs. Significantly reduces the amount of mucus in the body. Put the squash in boiling hot water, cover and let it cool and give it to children. If adults have fever, persistent cough, or severe headache, take equal amounts of citronella, licorice, and thyme and boil it in water and drink it with jaggery and honey. The fever will subside. This can be done as a first aid for fever. Immunity in a small child - சிற்றரத்தை: When giving baby medicine to a newborn baby. These also give the body immunity. Preventing the baby from getting respiratory disease. Gives strength to the body. For children with ailments, use this herb, burn it in a fire,likewise vasambu, soak it in charcoal and rub it on the tongue, and the baby will get relief. We also include it in the obstetrics because the baby needs nutrients.



Tamil Translation


சித்தரத்தை தரும் சிறப்பான ஆரோக்கியம்! (Sitharathai Benefits in Tamil)சித்தரத்தை எனும் அற்புத மூலிகை குறித்து இன்றுள்ள தலைமுறை பெரும்பாலும் தெரிந்திருக்காமல் இருப்பது வருத்தமான விஷயம்தான். நெஞ்சிலிருக்கும் சளியை வஞ்சமில்லாமல் அகற்றக்கூடிய அரத்தைப் பற்றி பார்ப்போம். நெஞ்சு சளி, கோழை, ஈளை, இருமல், நாட்பட்ட கபம்னு எல்லாத்தையும் குணமாக்குற சக்திவாய்ந்தது இந்த அரத்தை. இப்போதிருக்கும் சூழலில் சளி, இருமல், தும்மலெல்லாம் சாதாரண விஷயமாக இல்லை.


சித்தரத்தையின் மருத்துவ பலன்கள் (Sitharathai Uses / Sitharathai Benefits in Tamil) சித்தரத்தை, sitharathai benefits in tamil சித்தரத்தை பொடி: "அதான் சித்தரத்தை. அந்த அரத்தைய பொடியாக்கி 2-4 கிராம் எடுத்து, தேன் கூட கலந்து டெய்லி ரெண்டு வேளை சாப்பிட்டா, சளியெல்லாம் பறந்துடும். அரத்தையில் இரண்டு வகை: அரத்தையில சிற்றரத்தை பேரரத்தைனு ரெண்டு வகை இருக்கு. ரெண்டுமே சளிக்கு நல்லதுதான். சித்தரத்தை கசாயம்: நெஞ்சு சளி, கோழை, ஈளை, இருமல், நாட்பட்ட கபம்னு எல்லாத்தையும் குணமாக்குற சக்திவாய்ந்தது இந்த அரத்தை. அரத்தைய கசாயம் போட்டு குடிச்சா, நுரையீரல்-தொண்டை நோயெல்லாம் ஓடிப்போகும். இஞ்சி குடும்பத்தை சேர்ந்த இந்த அரத்தைய தட்டி, 350 மிலி வெந்நீர்ல 3 மணிநேரம் ஊற வச்சு, வடிகட்டி 22 மிலி – 44 மிலி தேன் கலந்து குடிச்சு வந்தாலும் சளி இருமலெல்லாம் சரியாகும்.” நாக்கில் புண் - சிற்றரத்தை உபயோகிக்கலாம்: பற்களை சுத்தமாக துலக்கினாலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை நீங்காது. சிலருக்கு வயிற்றில் புண் இருந்தாலும் கூட வாய்துர்நாற்றம் வரும். இதனால் பேசவும் முடியாமல் வாயை திறக்கவும் முடியாமல், உணவை மெல்லவும் முடியாமல் அவதிப்படுவார்கள். இவர்களுக்கு சிற்றரத்தை நல்ல தீர்வாக இருக்கும். சிற்றரத்தை வாங்கி ஒரு துண்டு சிற்றரத்தையை இரண்டு டம்ளர் நீரில் ஊறவைத்துவிடுங்கள். பிறகு பல் தேய்த்து முடித்ததும் வாய் கொப்புளித்து, பிறகு இந்த நீரை கொண்டு வாய் கொப்புளிக்க வேண்டும். சில விநாடிகள் வாயில் வைத்து பிறகு வாய் முழுவதும் நீர் சுவை பரவும் படி கொப்புளித்து விழுங்க வேண்டும். இப்படி செய்தால் மூன்று நாளில் நாக்கில் இருக்கும் புண் குறையும். வாய் துர்நாற்றம், வாய்ப்புண், வாய் ஓரங்களில் இருக்கும் வெடிப்பு வாய் வேக்காளம் அனைத்தும் நீங்கும். காய்ச்சல் குறைய - சிற்றரத்தை உபயோகிக்கலாம்: அதிக காய்ச்சலோடு அவதிபட்டால் சிற்றரத்தை நீர் குடிக்கலாம். சற்றே கார்ப்பு சுவை கொண்ட இந்த சிற்றரத்தை உடலுக்கு வேண்டிய வெப்பத்தை கொடுக்கும். உடலில் கபத்தின் அளவை கணிசமாக குறைக்கும். சிற்றரத்தையை கொதித்த வெந்நீரில் போட்டு இறக்கி மூடி ஆறவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பெரியவர்கள் காய்ச்சல், தொடர் இருமல், தீரா தலைவலி போன்றவற்றை கொண்டிருந்தால் சிற்றரத்தை, அதிமதுரம், திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம், தேன் சேர்த்து குடித்துவந்தால் மாற்றம் விரைவில் கிடைக்கும். காய்ச்சல் குறையும். காய்ச்சலுக்கு முதலுதவியாகவே இதை செய்யலாம். சிறு குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி - சிற்றரத்தை: பிறந்த குழந்தைக்கு உரை மருந்து கொடுக்கும் போது சிற்றரத்தையும் சேர்த்து உரைப்பார்கள். இவை உடலுக்கு நோய் எதிர்ப்புசக்தியையும் கொடுக்கவல்லது. குழந்தைக்கு சுவாச நோய் வராமல் தடுக்கும். உடலுக்கு வலு கொடுக்கும். இளைப்பு நோய் இருக்கும் குழந்தைகளுக்கு சிற்றரத்தையை வசம்பு போல் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் சுட்டு கரியாக்கி தேனில் குழைத்து , நாக்கில் தடவினால் குழந்தைக்கு நிவாரனம் கிடைக்கும். குழந்தைக்கு சிற்றரத்தை சத்து தேவை என்பதால் தான் பிரசவ லேகியத்திலும் இதை சேர்க்கிறோம்.

29 views0 comments

Comentários


bottom of page