top of page

Thuthi Keerai Benefits /துத்தி இலை பயன்கள்





Thuthi is used as an excellent remedy for hemorrhoids. Allopathy says that surgery is the only way to cure hemorrhoids in modern medicine. But to kill the hemorrhoids germs in the stomach, if you grind tutti leaves and drink one glass every morning on an empty stomach for 7 days, it will cure easily. Later in life, the man never gets hemorrhoids.


How to eat?


Pluck these tuthi leaves, take a handful and grind it well. Grind it well with four small onions and mix it with buttermilk and eat it continuously for 4 days. All 9 types of root can heal. It tastes like basil. Can be chewed with bare mouth. No side effects occur.




Or


Take 2-3 leaves of thutti leaves and add some water to make a paste. Mix this paste with water buttermilk. Drink this mixture on an empty stomach for 2-3 days. It helps in reducing the pain caused by it and relieves anal irritation. Reduces bleeding.


Ointment:


If there is inflammation of the anus, heat thuddhi leaves in castor oil and apply on the inflamed or affected area. It provides quick relief from the pain and inflammation caused by the root.


Diabetics:


Dried flowers of Avarampoo and Thutti are used in controlling diabetes. Consuming tuthi leaves helps strengthen muscles.


White discharge:


Mix thutti leaves and small onions and saute in ghee. Consuming this with plain hot rice for 40-120 days will control severe white discharge problems.


Injuries:


Crush thuddi leaves and mix the ground leaves with turmeric and tamarind for sores that do not heal. (External coating only) Apply on wounds for faster healing.


Recipe:


Add olive oil to the pan and season it with seasoning, chop the sambar onion and saute it with the greens. Then add half a tumbler of water and keep the spinach on a medium flame, then add the mashed dal, stir well, add the coconut flakes, sprinkle with pepper and salt.


Everyone from children to adults can eat hot rice mixed with ghee. Everyone from growing children to the elderly can eat ginger. Add this vegetable to your diet at least once a week. Clean and grind the coriander leaves and make dosa.



Note:


If you are taking it as a medicine, take it as per your doctor’s advice.


Tamil Translation





துத்தக்கீரையானது மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நவீன மருத்துவத்தில் மூலநோயை குணமாக்க, ஒரே வழி அறுவைசிகிச்சை தான் என்கின்றனர் அலோபதியில். ஆனால் மூல நோய் கிருமிகளை வயிற்றிலேயே அழிப்பதற்கு துத்தி இலைகளை அரைத்து, தினமும் காலையில் 7 நாட்களுக்கு வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அருந்தி வந்தால், எளிதில் குணமாகும். பின்னர் வாழ்நாளில், அந்த மனிதனை மூலநோய் அண்டவே அண்டாது.

எப்படி சாப்பிட வேண்டும்?

இந்த துத்தி இலைகளைப் பறித்து, ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு, அதை நன்கு அலசிக் கொள்ள வேண்டும். அதை நான்கு சின்ன வெங்காயத்தோடு சேர்த்து நன்கு மை போல அரைத்து மோரில் கலந்து தொடர்ந்து 4 நாட்கள் சாப்பிட்டாலே போதும். 9 வகையான மூலமும் குணமடையும். இது துளசியைப் போன்றுதான் சுவையுடன் இருக்கும். வெறும் வாயில் கூட மென்று சாப்பிடலாம். எந்தவித பக்க விளைவும் ஏற்படாது.

அல்லது

துத்தி இலைகள் 2-3 இலைகளை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து மைய பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை நீர் மோருடன் கலக்கவும். இந்த கலவையை வெறும் வயிற்றில் 2-3 நாட்கள் குடித்து வரவும் . இது மூலம் காரணமாக ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது மேலும் ஆசன வாய் எரிச்சல் நீக்குகிறது. இரத்தப்போக்கு குறைக்கிறது.

கலிம்பு :

ஆசன வாய் வீக்கம் இருந்தால் துத்தி இலைகளை ஆமணக்கு எண்ணெயில் சூடாக்கி, வீக்கம் உள்ள இடத்தில் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்கவும். இது மூலத்தால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து விரைவில் நிவாரணம் தரும்

நீரிழிவு நோய்

ஆவாரம்பூ மற்றும் துத்தியின் உலர்ந்த பூ நீரிழிவு நோய் கட்டுப்படுத்துவதில் பயன்படுத்தப்படுகிறது. துத்தி இலைகளை உட்கொள்வது தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.

வெள்ளைப்படுதல்

துத்தி இலையை, சிறு வெங்காயம் கலந்து நெய்யில் வதக்கவும். இதை உதிரான சூடான சாதத்துடன் சேர்த்து 40-120 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெள்ளை வெளியேற்ற பிரச்சனைகள் கட்டுப்படும்.

காயங்கள்

ஆறாத புண்கள் இருந்தால் துத்தி இலைகளை நசுக்கி, அரைத்த இலைகளை மஞ்சள் மற்றும் புளியுடன் கலக்கவும். (வெளிப்புறப்பூச்சு மட்டும்) காயங்கள் மீது தடவி வந்தால் விரைவாக குணமாகும்.

துத்திக்கீரையை உணவாக எடுக்கலாம். அதே நேரம் அதை மருத்துவ சிகிச்சையாக எடுக்கும் போது மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

துத்துக்கீரையை கீரை போன்று புளி சேர்த்து மசித்து சாப்பிட வேண்டாம். துத்திக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒருகப் கீரைக்கு அரைகல் பாசிப்பருப்பு சேர்க்க வேண்டும். பாசிப்பருப்பை வேக வைத்து எடுக்கவும்.




வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து தாளிப்பு பொருள் சேர்த்து தாளித்து சாம்பார் வெங்காயத்தை நறுக்கி கீரையை சேர்த்து வதக்கவும். பிறகு அரை டம்ளர் நீர்விட்டு கீரையை மிதமான தீயில் வைத்து பிறகு மசித்த பாசிப்பருப்பை சேர்த்து நன்றாக கிளறி தேங்காய்த்துருவல் சேர்த்து மிளகுத்தூள்,உப்பு சேர்த்து தூவி இறக்கவும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு கலந்து சாப்பிடலாம். வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே துத்திக்கீரையை சாப்பிடலாம். வாரம் ஒருமுறையாவது உணவில் இந்த கீரையை சேர்க்கலாம். துத்திக்கீரையை சுத்தம் செய்து அரைத்து தோசையாக வார்க்கலாம்.

குறிப்பு

மருந்தாக எடுத்துகொள்வதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு சரியாக எடுத்துகொள்ளுங்கள்.


6 views0 comments

コメント


bottom of page